ராதே க்ருஷ்ணா!

English

ராதா கல்யாண மஹோத்ஸவ இன்ஸ்டிடியூட் டிரஸ்ட்-நுங்கம்பாக்கம்

Swami_img

ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே... ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!

தகவல்கள்

ராதா கல்யாண மஹோத்ஸவ இன்ஸ்டிடியூட் டிரஸ்ட் (பதிவு) (Estd.:1923/Regd.:1982) நுங்கம்பாக்கம், சென்னை - 600 034


இடம்: ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மண்டபம் நுங்கம்பாக்கம் ஸேவா ஸமாஜம் டிரஸ்ட் 43, நூர் வீராசாமி லேன், நுங்கம்பாக்கம், சென்னை - 600 034
inimg1

தினமும் தியானிக்க வேண்டிய ஸ்லோகம்:

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே|
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே||

நன்கொடை அனுப்ப:

QR Code

1923 இல் தொடங்கி, 100 வருடம் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பழமையான இந்த நுங்கம்பாக்கம் ராதா கல்யாண மஹோத்ஸவம் சென்னையில் மிகவும் பிரபலம். கிருஷ்ண ஐயர் தெரு, வில்லேஜ் ரோடு, வைத்யநாத ஐயர் தெரு உபநிஷத் ஆஸ்ரமம் என பல இடங்களில் அலங்கரித்து விட்டு தற்பொழுது நூர் வீராசாமி லேனில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மண்டபதில் ராதா கல்யாண மஹோத்ஸவ இன்ஸ்டிடியூட் டிரஸ்ட்-நுங்கம்பாக்கம் மூலம் சிறப்பாக வருடா வருடம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும், காஞ்சி ஆச்சார்யாள், போதேந்திராள் குருநாதாள், திருவிசநல்லூர் அய்யாவாள் மற்றும் மருதாநல்லூர் ஸ்வாமிகள் ஆசிர்வாதத்துடன் ஆரம்பிக்கப்படுகிறது.



முந்தைய காலங்களில்(1970 மற்றும் அதற்கும் முன்னர்) ஐந்து நாட்கள் வரை நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த ராதா கல்யாண உற்சவம், தற்பொழுது மூன்று நாட்கள் விமர்சையாக நடைபெறுகிறது. நுங்கம்பாக்கம் ராதா கல்யாணத்திற்கு இன்னொரு பெயரும் உண்டு. அது பக்கெட் ராதா கல்யாணம். வருடா வருடம் பக்தர்களுக்கு உணவு பரிமாற புது பக்கெட்கள் (கரண்டி உட்பட) வாங்கி உபசரிப்பதால், பக்கெட் ராதா கல்யாணம் என்ற பெயரும் வந்தது. நமது நுங்கம்பாக்கம் ராதா மாதவ விஹாஹ வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மனமுருகி வேண்டி, நினைத்த காரியங்கள் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.

நாள் 1:

  • பந்தக்கால் முஹூர்த்தம்
  • ஸ்ரீ கணபதி ஹோமம்
  • வசந்த மாதவ பூஜை
  • கலச ஸ்தாபனம்
  • தோடய மங்களம்
  • குரு கீர்த்தனை
  • அஷ்டபதி
  • தரங்கம்
  • பஞ்சபதி
  • ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
  • நாம சங்கீர்த்தனம்

நாள் 2:

  • ஸஹஸ்ரநாம அர்ச்சனை
  • பாகவத ஆராதனை நாம சங்கீர்த்தனத்துடன்
  • அபங்க நாம சங்கீர்த்தனம்
  • ஜானவாச ஊர்வலம்
  • திவ்ய நாம சங்கீர்த்தனம்
  • டோலோஸ்தவம்

நாள் 3:

  • மங்கள இசை
  • சூரிய நமஸ்காரம்
  • உஞ்சவ்ருத்தி
  • ராதா மாதவ விவாஹம்
  • ஆஞ்சநேய உற்சவம்
Iternary Image

நமது நுங்கம்பாக்கம் ராதா கல்யாண வைபவத்திற்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள், கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு தங்களால் இயன்ற தொகையை செலுத்தி, ராதா கல்யாண டிரஸ்ட் நிர்வாகிகளிடம் விவரம் தெரிவித்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.
பொருட்களாக நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள், ராதா கல்யாண மஹோத்சவ இன்ஸ்டிடியூட் டிரஸ்ட் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பின்னர் நன்கொடை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Bank Details

Canara Bank, Nungambakkam Branch,
IFSC: CNRB0000926. Savings A/C: 0926101012919
Radha Kalyana Mahostava Institute Trust
BHIM UPI ID:rkmint@cnrb

Iternary Image

விஷ்ணு பகவானின் நேரடி ஆசீர்வாதம் பெற்ற நமது மனித தெய்வங்களாகிய பாகவதாக்கள், யதிகளின் ஆராதனை நாட்களில் நமது ராதா கல்யாண மஹோத்ஸவ டிரஸ்ட் சார்பாக உஞ்சவிருத்தி வைபவம், விருப்பப்படும் அன்பர்களுக்கு நடத்திவைக்கப்படுகின்றது.

நுங்கம்பாக்கம் நூர் வீராசாமி லேனில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மண்டபம் என்ற கட்டடம் கட்டி முடிக்க, தாராள மனதுள்ள பெரியவர்களின் நிதி உதவியும், மேலும் சில ஆன்மீக டிரஸ்ட்களின் நன்கொடை உதவியுடன், நமது ராதா கல்யாண மஹோத்ஸவ இன்ஸ்டிடியூட் டிரஸ்டின் பங்களிப்பும் உதவியது. 13-10-2002 அன்று காஞ்சி பெரியவாள் ஆசீர்வாதத்துடன் மண்டபம் திறப்பு விழா கண்டு இன்று வரை பல ஆன்மீக பணிகளைசிறப்பாக நடத்திக்கொண்டு வருகிறார்கள்.

நமது ராதா கல்யாண டிரஸ்டுடன், இன்னும் சில டிரஸ்டுகள் கைகோர்த்து பல ஆன்மிக நிகழ்ச்சிகளை நமது சமாஜத்தில் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். அவ்வாறு நடைபெறும் நிகழ்ச்சிகள் சில:

  1. தினம் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் மற்றும் லலிதா ஸஹஸ்ரநாமப் பாராயணம்
  2. ப்ரதி சனிக்கிழமை திவ்ய நாம பஜனை
  3. ஏகாதசி அஷ்டபதி பஜனை
  4. ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம்
  5. சர்வ வேத சம்பூர்ண சதுர் வேத பாராயணம்
  6. தமிழ் வருட பிறப்பு பஞ்சாங்க படணம்
  7. மஹா சிவராத்திரி மஹோஸ்தவம் - மகா ருத்ரம்
  8. ஆடிக் கிருத்திகை சுப்ரமண்ய ஸ்வாமி பூஜை
  9. ஆடிக் கிருத்திகை பஜனை மற்றும் வள்ளிக் கல்யாணம்
  10. ப்ரதி ஆண்டு ராதா மாதவ விவாஹம்
  11. ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகளுக்கு பிக்க்ஷாவந்தனம் மற்றும் பிடி அரிசி திட்டம்
  12. ப்ரதோஷம், மூலா நக்ஷத்திரம், சங்கடஹர சதுர்த்தி மற்றும் பௌர்ணமி நாட்களில் விசேஷ அபிஷேகம், அர்ச்சனை மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன
  13. ஸ்ரீ சங்கர ஜெயந்தி - ஆச்சார்யாள் ஜென்ம நக்ஷத்ர ஜெயந்தி

ராதா கல்யாண மஹோத்ஸவ இன்ஸ்டிடியூட் டிரஸ்ட் பற்றிய மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, கீழ் கண்ட டிரஸ்ட் நிர்வாகிகளை அணுகவும்.

விவரங்கள்:

ஸ்ரீ S. முகுந்தன்
சேர்மன்
94448 72891

ஸ்ரீ K. ராஜகோபாலன்
செயலாளர்
94444 17165

ஸ்ரீமதி. விஜயலக்ஷ்மி ரகுராமன்
பொருளாளர்
73582 38101

Radha